கைதிகள் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடக் கூடாது. போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தல்


கைதிகள் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடக் கூடாது. போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 27 Oct 2021 10:40 PM IST (Updated: 27 Oct 2021 10:40 PM IST)
t-max-icont-min-icon

கைதிகள் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடக் கூடாது

வேலூர்

வேலூர் தொரப்பாடியில் உள்ள மத்திய ஆண்கள் ஜெயிலில் கைதிகள் விடுதலைக்கு பின்னர் குற்றச்செயல்களில் ஈடுபடாமல் வாழ்வது தொடர்பான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. வேலூர் மத்திய ஜெயில் சூப்பிரண்டு ருக்மணி பிரியதர்ஷினி தலைமை தாங்கினார். ஜெயில் அலுவலர் குணசேகர், நல அலுவலர் மோகன், மனஇயல் நிபுணர் பாஸ்கரன், பாகாயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் கலந்து கொண்டு பேசுகையில், ஜெயிலில் தண்டனை அனுபவிக்கும் பலர் பல்வேறு சந்தர்ப்ப சூழ்நிலையால் இங்கு வந்துள்ளனர். சிலர் மட்டுமே திட்டமிட்டு குற்றங்கள் செய்ததால் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். ஜெயில் என்பது குற்றங்களுக்கு தண்டனை வழங்கும் இடமல்லை. தவறு செய்தவர்கள் அதனை உணர்ந்து தண்டனை காலத்தில் திருந்தி வாழும் இடமாகும்.

 ஜெயிலில் இருந்து விடுதலையாகும் கைதிகள் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபட கூடாது. அதற்கான சூழ்நிலைகள் ஏற்பட்டால் அதனை கடந்து செல்ல வேண்டும். கைதிகள் மீண்டும் இந்த இடத்துக்கு வரக்கூடாது என்று எண்ணி வெளியில் வாழ வேண்டும் என்று கூறினார்.


Next Story