விழுப்புரத்தில் பட்டாசு கடைகளில் அதிகாரிகள் ஆய்வு


விழுப்புரத்தில் பட்டாசு கடைகளில் அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 27 Oct 2021 10:41 PM IST (Updated: 27 Oct 2021 10:41 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் பட்டாசு கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

விழுப்புரம், 

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிக்கைக்கு இன்னும் ஒரு வாரமே எஞ்சி உள்ளது. இதனால் பட்டாசு கடைகளில் வியாபரம் சூடுபிடித்துள்ளது. அதே நேரத்தில் பட்டாசு கடைகள் முறையான அனுமதி பெற்று, அரசு வகுத்துள்ள அனுமதியின் படி இயங்கிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதற்கிடையே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 பேர் உடல் கருகி பலியானார்கள். அதேபோல் பலர் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த கோர சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடைகளில் ஆய்வு

இந்நிலையில் விழுப்புரம்  பகுதியில் இயங்கும் பட்டாசு கடைகள் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி இயங்குகிறதா என்று நேற்று அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.

அதன்படி  விழுப்புரம் நகராட்சி நகர்நல அலுவலர் பாலசுப்பிரமணியம் தலைமையிலான ஊழியர்கள் பட்டாசு கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, விழுப்புரம் திரு.வி.க. ரோடு, காமராஜர் ரோடு, மகாத்மா காந்தி ரோடு, நேருஜி ரோடு, கன்னியா குளம் ரோடு, ஆகிய பகுதிகளில் உள்ள பட்டாசு கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். 

அப்போது, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கடை உரிமையாளர்களுக்கு பல்வேறு ஆலேசானைகளையும் வழங்கினர்.

Next Story