திமிரியில் அடிப்படை வசதியின்றி தவிக்கும் பூம்பூம் மாட்டுக்காரர்கள்
அடிப்படை வசதியின்றி தவிக்கும் பூம்பூம் மாட்டுக்காரர்கள்
கலவை
திமிரி பேரூராட்சியில் பழைய போலீஸ் நிலையம், திரவுபதியம்மன் கோவில் போன்ற பகுதிகளில் பூம்பூம் மாட்டுக்காரர்கள் வசித்துவந்தனர். அவர்களுக்கு 6 மாதங்களுக்கு முன்பு பரதராமி சாலையில் அரசு வீட்டுமனை வழங்கியது. அங்கு அவர்கள் துணியால் கூடாரம் அமைத்து வாழ்ந்து வருகின்றனர்.
அவர்களுக்கு இதுவரை மின்சார வசதி செய்யப்படவில்லை. ஆழ்துளை கிணறு போடப்பட்டுள்ளது. அதிலிருந்து தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை. கடந்த ஒரு மாதமாக பெய்துவரும் மழையால் அவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இரவு நேரங்களில் விஷப்பூச்சிகள் நடமாட்டம் இருப்பதால் குழந்தைகள் அச்சத்துடன் இருக்கின்றனர்.
இரவில் மெழுகுவர்த்தி, திரிவிளக்கு வெளிச்சத்தில் குடும்பம் நடத்தி வரும் இவர்களுக்கு ரேஷன் கார்டு, ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இவர்களுடைய குழந்தைகள் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.
அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கக்கோரி பல முறை அரசு அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவர்களுக்கு அடிப்படை தேவையான மின்சாரம், குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story