அனுமதியின்றி பட்டாசு கடை வைத்திருப்போர் மீது கடும் நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் எச்சரிக்கை


அனுமதியின்றி பட்டாசு கடை வைத்திருப்போர் மீது கடும் நடவடிக்கை  போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் எச்சரிக்கை
x
தினத்தந்தி 27 Oct 2021 11:05 PM IST (Updated: 27 Oct 2021 11:05 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனுமதி இன்றி பட்டாசு கடை வைத்திருப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் எச்சரிக்கை விடுத்துள்ளார்

சங்கராபுரம்

போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

சங்கராபுரத்தில் பட்டாசு கடையில் தீ விபத்து நடந்த இடத்தில் நேற்று 2-வது நாளாக மீட்பு பணிகள் நடைபெற்றது. இதை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் நேரில் ஆய்வுசெய்தார்.  அப்போது மீட்பு பணியை விரைந்து முடிக்கும்படி அதிகாரிகளை கேட்டு்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கடைக்கு சீல் வைக்கப்படும்

விபத்து நடந்த இடத்தில் இயங்கி வந்த பட்டாசு கடை கடந்த 10 வருடங்களாக தற்காலிக அனுமதி பெற்று நடத்தி வரப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணங்கள் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனுமதி இல்லாமல் பட்டாசுகள் விற்கப்படுவதை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர சோதனை நடத்தி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.  மேலும் அனுமதியின்றி பட்டாசு கடை வைத்திருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதோடு கடைக்கு சீல் வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story