இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 Oct 2021 6:00 PM GMT (Updated: 2021-10-27T23:30:57+05:30)

இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அன்னவாசல்:
அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர் ஜோசி தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் சண்முகம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் தீபாவளி திருநாளை முன்னிட்டு தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணியாற்றும் பயனாளிகளுக்கு சம்பளம் வழங்க கோரியும், 100 நாள் வேலை திட்டத்தை பேரூராட்சி பகுதிகளில் விரிவுப்படுத்த கோரியும், 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களை விவசாய பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் சுப்பையா, ஒன்றிய தலைவர் ரெங்கசாமி, ஒன்றிய அமைப்பாளர் தேவராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story