மாவட்டத்தில் புதிதாக 11 பேருக்கு கொரோனா தொற்று
புதிதாக 11 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 143 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் கொரோனா சிகிச்சையில் 14 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 29 ஆயிரத்து 596 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் கொரோனாவுக்கு தற்போது 132 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 415 ஆக உள்ளது.
ஆதனக்கோட்டை சுகாதார நிலைய வட்டாரத்திற்குட்பட்ட ஐ.டி.ஐ. காலனியை சேர்ந்த 18 வயது வாலிபருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
Related Tags :
Next Story