சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயல்பாடுகள் குறித்த புகைப்பட கண்காட்சி


சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயல்பாடுகள் குறித்த புகைப்பட கண்காட்சி
x
தினத்தந்தி 27 Oct 2021 11:47 PM IST (Updated: 27 Oct 2021 11:47 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில் சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயல்பாடுகள் குறித்த புகைப்பட கண்காட்சி நடந்தது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயல்பாடுகள் குறித்து புகைப்பட கண்காட்சியை முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் அணைக்குழுவின் தலைவருமான திருமகள் தொடங்கி வைத்தார். 

பின்னர் அவர் சட்டம் குறித்த விழிப்புணவு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். 

தொடர்ந்து சட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த புத்தக அரங்கத்தை திறந்து வைத்து பார்வையிட்டார்.

இந்த அரங்கத்தில் பொதுமக்கள் சட்டங்கள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளது. 

மேலும் தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு வருகிற 14-ந்தேதி வரை கிராமங்கள் தோறும் சட்டம் மற்றும் அடிப்படை உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. 

அதன்படி, மாவட்டத்தில் சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 

நிகழ்ச்சியில் மகிளா நிதிபதியும், செயலாளருமான ஆர்.சங்கம், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமரசாமி, கூடுதல் மாவட்ட நீதிபதி காயத்திரி, குடும்ப நல நீதிமன்றம் கோவிந்தராஜி மற்றும் வக்கீல்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story