சூதாடிய 23 பேர் கைது


சூதாடிய 23 பேர் கைது
x
தினத்தந்தி 28 Oct 2021 12:06 AM IST (Updated: 28 Oct 2021 12:06 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் சூதாடிய 23 பேரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர், 
விருதுநகர் அருகே எட்டூர்வட்டம் சோதனைச்சாவடி அருகே உள்ள பகுதிகளில் மதுவிலக்கு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது  அங்குள்ள ஒரு கட்டிடத்தில் அதிக சத்தம் கேட்கவே அங்கு சென்று பார்த்தபோது அங்கு பலர் காசு வைத்து சூதாடிக் கொண்டிருந்தனர். இதுபற்றி வச்சக்காரப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று அங்கு காசு வைத்து சூதாடிக் கொண்டிருந்தவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் சாத்தூர் அமீர் பாளையத்தை சேர்ந்த மாரீஸ்வரன் கண்ணன் (வயது 42) என்பவர் அந்த கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து உள்ளதாகவும் அங்கு அவர் காசு வைத்து சூதாட அனுமதித்ததாகவும் தெரிய வந்தது. அதன் பேரில் போலீசார் மாரீஸ்வரர் கண்ணன் மற்றும் காசு வைத்து சூதாடிக் கொண்டிருந்த சின்னகொல்லப்பட்டியை சேர்ந்த மாரிமுத்து (42), சாத்தூர் சின்னத்தம்பி (48), மேட்டமலை ஆனந்தராஜ் (45), முருகேசன் (52), சாத்தூர் கண்ணன் (50), ராஜ் (52), இருக்கன்குடி ஜெயக்கண்ணன் (47), சாத்தூர் சோமசுந்தரம் (57), கணேஷ் பாபு (47), வேப்பிலைப்பட்டி பாலசுப்பிரமணியம் (54), மேட்டமலை மணி (31), கருப்பசாமி (42), ராம குடும்பன்பட்டி மச்சவல்லவன் (60), பெரியகொல்லப்பட்டி தமிழ் மாரீஸ்வரன் (40), போத்தி ரெட்டியபட்டி குருசாமி (36), உள்பட 23 பேரை கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்  பின்னர் அவர்களிடம் இருந்து சூதாட்ட பணம் ரூ. 90 ஆயிரத்து 325 பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story