விழிப்புணர்வு நிகழ்ச்சி


விழிப்புணர்வு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 28 Oct 2021 12:23 AM IST (Updated: 28 Oct 2021 12:23 AM IST)
t-max-icont-min-icon

தீயணைப்புத்துறை சார்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பாதுகாப்பாக தீபாவளி கொண்டாடுவது குறித்து தீயணைப்புதுறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தீயணைப்புதுறை மாவட்ட அலுவலர் கணேசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் பட்டாசு வெடிக்கும் போது பாதுகாப்பான முறையில் வெடிக்க வேண்டும் எனவும், பட்டாசு வெடிக்கும் போது அருகில் ஒரு வாளியில் தண்ணீர் வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் தீயணைப்பு துறை மாவட்ட உதவி அலுவலர் மணிகண்டன், அருப்புக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயபாண்டி, தீயணைப்பு வீரர்கள், பள்ளி தலைமையாசிரியர் ஆனந்தராஜன், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Next Story