‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 28 Oct 2021 12:57 AM IST (Updated: 28 Oct 2021 12:57 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புகார் பெட்டிக்கு நன்றி
புதுக்கோட்டையில் இருந்து அன்னவாசல், இலுப்பூர், விராலிமலை, மணப்பாறை, தோகைமலை, குளித்தலை வழியாக கரூக்கு பஸ் இயக்க வேண்டும் என்று ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி பிரசுரிக்கப்பட்டு இருந்தது. இந்த கோரிக்கையை ஏற்று புதிதாக கரூருக்கு பஸ் இயக்கப்பட்டுள்ளது. எனவே நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், இந்த செய்தியை வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும் பொதுமக்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
 ராமன், ராஜாளிப்பட்டி.
சேறும் சகதியுமாக மாறிய சாலை 
திருச்சி கோர்ட்டு வளாகத்தில் மின்வாரிய அலுவலகம், நுகர்பொருள் வாணிபகழகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த அலுவலகங்களுக்கு செல்லும் சாலை தொடர் மழை காரணமாக சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அரசு அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சபரீஷ், திருச்சி.
பழுதடைந்த சாலை சீரமைக்கப்படுமா? 
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே பாண்டி பத்திரத்திலிருந்து பூங்குடி கிராமத்திற்கு செல்லும் இணைப்பு சாலை மிகவும் பழுதடைந்து ஜல்லிக்கற்கள் உதிர்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக எந்த வாகனங்களும் செல்வது இல்லை. மேலும் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுபஸ்ரீ, புதுக்கோட்டை.
சாலையில் உலா வரும் கால்நடைகள்
கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி ஷாநகரில் காலை மற்றும் மாலை நேரங்களில் கால்நடைகள் நடுரோட்டில் நின்று கொண்டு போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளன. மேலும் அந்த வழியாக அதிவேகத்தில் வரும் வாகனங்களால் கால்நடைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கால்நடைகளை சாலையில் உலாவிடுபவர்களை கண்டறிந்து அவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
மணிவேல், கருர்.
நிழற்குடை முன்பு தேங்கி நிற்கும் கழிவுநீர்
அரியலூர் மாவட்டம் ரெட்டிப்பாளையம் ஊராட்சியில் மயிலாண்டகோட்டை அமைந்துள்ளது. இது திருச்சி-ஜெயங்கொண்டம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள நிழற்குடை முன்பு தோண்டப்பட்ட பள்ளம் சரிவர மூடப்படவில்லை. மேலும், கழிவுநீர் அப்பகுதியில் வழிந்தோடுகிறது. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் மிகவும் அவதியடைந்து வருகிறார்கள் .எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தீனா, அரியலூர்.
குடிநீர் குழாய் உடைப்பு
திருச்சி மாவட்டம் மெய்க்கல்நாயக்கன்பட்டியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு குடிநீர் குழாய் உடைந்தது. இதனால் சாலைகளில் குடிநீர் வீணாக செல்கிறது. இதுகுறித்து பல முறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாயை சீரமைக்க வேண்டும்.
சதீஷ், திருச்சி.

Next Story