‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 28 Oct 2021 1:09 AM IST (Updated: 28 Oct 2021 1:09 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும்
திருச்சி மாவட்டம் துறையூரில் இருந்து பாலகிருஷ்ணம்பட்டிக்கு செல்ல பஸ் வசதி இல்லை. இதனால் பள்ளி மற்றும் வேலைக்கு செல்வோர் மற்றும் இரவு பணி முடிந்து வீட்டுக்கு செல்வோர் மிகவும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பகுதியில் பஸ் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரதீப், துறையூர், திருச்சி.
சேறும் சகதியுமாக மாறிய சாலை 
திருச்சி கோர்ட்டு வளாகத்தில் மின்வாரிய அலுவலகம், நுகர்பொருள் வாணிபகழகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த அலுவலகங்களுக்கு செல்லும் சாலை தொடர் மழை காரணமாக சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அரசு அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சபரீஷ், திருச்சி.
குடிநீர் குழாய் உடைப்பு
திருச்சி மாவட்டம் மெய்க்கல்நாயக்கன்பட்டியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு குடிநீர் குழாய் உடைந்தது. இதனால் சாலைகளில் குடிநீர் வீணாக செல்கிறது. இதுகுறித்து பல முறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாயை சீரமைக்க வேண்டும்.
சதீஷ், திருச்சி.
வாகன ஓட்டிகள் அவதி
திருச்சி 10-வது வார்டு, வடக்கு ஆண்டாள் வீதி பிரதான சாலையில் புதுப்படி சந்து நுழைவு பகுதியில் பாதாள சாக்கடை இணைப்பு பகுதி குண்டும், குழியுமாக உள்ளது. மழைக்காலங்களில் குழிகள் இருப்பது தெரியாமல் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகிறார்கள். ஒரு சிலர் கீழே விழுந்து காயம் அடைந்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் இதனை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுவாமிநாதன், திருச்சி.
சாக்கடையில் மீண்டும் அடைப்பு
திருச்சி அரியமங்கலம் 29-வது வார்டு அண்ணா நகரில் சாக்கடைகள் தூர்வாரப்பட்டன. தூர்வாரிய சாக்கடை மண்ணை அகற்றாமல் அப்படியே கிடப்பில் போட்டு விட்டனர். இந்தநிலையில் மழை பெய்து மீண்டும் தூர்வாரப்பட்ட மண் அனைத்தும் மீண்டும் சாக்கடைக்கு சென்றது. இதனால் துப்புரவு தொழிலாளர்களின் உழைப்பு வீணானது. சாக்கடையில் அடைப்பும் ஏற்பட்டது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தூர்வாரிய மண்ணை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரித்திகா, அண்ணா நகர், திருச்சி.
தெருவிளக்கு அமைக்க கோரிக்கை
ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரை ரோட்டில் உள்ள ரெயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்து வருகிறார்கள். மேலும் இங்கு தெருவிளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் பெண்கள் மற்றும் குழந்தைகள் அச்சம் அடைந்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பகுதியில் மழைநீர் தேங்காதவாறும், தெருவிளக்கு வசதி ஏற்படுத்தியும் தர வேண்டும்.
பாலசுப்ரமணியன், ஸ்ரீரங்கம், திருச்சி.
பாதாள சாக்கடை பணிகள் விரைந்து முடிக்க கோரிக்கை 
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 37-வது வார்டு கே.கே.நகர் கோவர்த்தன் கார்டன் 1,2,3 மற்றும் 4-வது குறுக்குத்தெருவில் பாதாள சாக்கடை பணிகளால் சாலை சேதமடைந்து உள்ளது. மேலும் சமீபத்தில் பெய்த மழையால் சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. மேலும், வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடித்து சாலையை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-டாக்டர் வெங்கட்ராமன், கே.கே.நகர், திருச்சி.

Next Story