கைதான தாசில்தார் பணியிடை நீக்கம்
திருச்சியில் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான தனிதாசில்தார் நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
திருச்சி, அக்.28-
திருச்சியில் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான தனிதாசில்தார் நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
ரூ.50 ஆயிரம் லஞ்சம்
திருச்சி கே.கே.நகரை சேர்ந்தவர் சீனிவாசன். ரியல் எஸ்டேட் அதிபர். இவருக்கு திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் 1.11 ஏக்கர் நிலம் அங்குராஜ் என்பவரின் அனுபவத்தில் உள்ளது. அந்த இடத்தை தாத்தா கருப்பண்ணன் பெயருக்கு மாற்றுவதற்கு சீனிவாசன் முடிவு செய்தார். அதற்காக, சீனிவாசன் பட்டா மாறுதல் பெற, திருச்சி மேற்கு தாலுகா அலுவலகத்தில் பணியாற்றும் நகர நிலவரி திட்ட தனிதாசில்தார் கோகுல் (வயது 42) என்பவரிடம் மனு செய்திருந்தார்.
இதுகுறித்து சீனிவாசன் கேட்டபோது, பட்டா மாறுதல் செய்து தர ரூ.1 லட்சம் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சீனிவாசன் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்தார். இதனையடுத்து போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில் சீனிவாசன் நேற்று முன்தினம் ரசாயன பவுடர் தடவப்பட்ட ரூ.50 ஆயிரத்தை லஞ்சமாக தனிதாசில்தார் கோகுலிடம் கொடுத்தார். அங்கு மறைந்திருந்த இன்ஸ்பெக்டர் சக்திவேல் உள்ளிட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக கைது செய்தனர்.
ரூ.2¾ லட்சம் சிக்கியது
இதனை தொடர்ந்து தாசில்தார் அலுவலகம் மற்றும் உறையூரில் உள்ள அவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்தனர். இந்த சோதனையில் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.27 ஆயிரம், வீட்டில் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்ந்து தனிதாசில்தார் கோகுலை விசாரித்து வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று காலை திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். நீதிபதி உத்தரவின்பேரில், அவரை முசிறி கிளை சிறையில் போலீசார் அடைத்தனர்.
பணியிடைநீக்கம்
இந்த நிலையில் தனிதாசில்தார் மீது முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்யப்பட்டதால், லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டின் அடிப்படையில் துறை ரீதியான நடவடிக்கைக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் பரிந்துரை செய்தனர்.
அதன் அடிப்படையில் தனித்தாசில்தார் கோகுலை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Tags :
Next Story