மணப்பாறை சந்தையில் ஆடுகள் விலையில்லாததால் விவசாயிகள் ஏமாற்றம்
தீபாவளி பண்டிகை நெருங்கியும் மணப்பாறை சந்தையில் ஆடுகள் விலைபோகாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் ஆடுகளை மீண்டும் வீட்டுக்கே கொண்டு சென்றனர்.
மணப்பாறை, அக்.28-
தீபாவளி பண்டிகை நெருங்கியும் மணப்பாறை சந்தையில் ஆடுகள் விலைபோகாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் ஆடுகளை மீண்டும் வீட்டுக்கே கொண்டு சென்றனர்.
தீபாவளி பண்டிகை
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள கால்நடைச் சந்தையில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறும். இந்த சந்தைக்கு அதிக அளவிலான ஆடுகள் வரும் என்பதுடன் வியாபாரிகள் மற்றும் விவசாயிகளின் எண்ணிக்கையும் அதிக அளவில் இருக்கும்.
இதுமட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆடு வாங்க, விற்க வருவார்கள். வழக்கமாக நடைபெறும் ஆட்டுச்சந்தையை விட பண்டிகை நாட்கள் நெருங்கும் போது ஆட்டுச் சந்தை களை கட்டும். விலையும் கனிசமாகவே உயர்ந்திருக்கும்.
போதிய விலை இல்லை
ஆனால் இந்த ஆண்டு தீபாவளிக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் நேற்று நடைபெற்ற சந்தைக்கு அதிக அளவில் ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தது. தீபாவளி நெருங்கி விட்டதால் விற்பனை அமோகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆட்டின் விலை மிகவும் குறைந்தே காணப்பட்டது. வழக்கமாக ஒரு ஆடு ரூ.15 ஆயிரத்துக்கு விற்றால், பண்டிகை காலங்களில் ரூ.500 கூடுதலாக விற்பனையாகும். ஆனால் நேற்று வழக்கமான விலையை விட குறைவான விலைக்கே விற்பனையானது. இதனால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தங்கள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்த ஆடுகள் விற்பனையாகாத சூழல் நிலவியது.
சிறிது நேரத்தில் முடிந்து விடும் ஆட்டுச் சந்தை நேற்று நீண்ட நேரம் ஆகியும் ஆடுகள் விற்பனையாகாத நிலையில் அப்படியே இருந்தது. போதிய விலை கிடைக்காததால் ஆட்டை விற்பனைக்கு கொண்டு வந்திருந்த பல விவசாயிகள் மீண்டும் அழைத்துச் சென்றனர். இதனால் ஏமாற்றமே மிஞ்சி இருந்தது.

Related Tags :
Next Story