டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை


டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 28 Oct 2021 1:55 AM IST (Updated: 28 Oct 2021 1:55 AM IST)
t-max-icont-min-icon

விக்கிரமசிங்கபுரம் அருகே டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள அடையகருங்குளம் நடுத்தெருவைச் சேர்ந்த முத்தையா மகன் சிவகுமார் (வயது 27). இவர் டிரைவர் வேலை செய்து வந்தார். திருமணம் முடிந்து 3 வருடங்கள் ஆன நிலையில் இவருக்கும், மனைவிக்கும் அடிக்கடி தகராறு வந்ததாக கூறப்படுகிறது
இந்தநிலையில் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நிலையில் சிவக்குமார் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி விக்கிரமசிங்கபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story