லாரிகள் மோதல்; டிரைவர் படுகாயம்


லாரிகள் மோதல்; டிரைவர் படுகாயம்
x
தினத்தந்தி 28 Oct 2021 2:29 AM IST (Updated: 28 Oct 2021 2:29 AM IST)
t-max-icont-min-icon

திருவேங்கடம் அருகே லாரிகள் மோதிக் கொண்ட விபத்தில் டிரைவர் படுகாயம் அடைந்தார்.

திருவேங்கடம்:
விருதுநகர் மாவட்டம் துலுக்கப்பட்டியில் இருந்து சிமெண்டு பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி கேரள மாநிலம் கொல்லம் நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த அப்புக்குட்டி மகன் அனு (வயது 31) என்பவர் ஓட்டினார். தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே நடுவப்பட்டிக்கு வந்ததும் லாரியை ஓரமாக நிறுத்துவதற்காக மெதுவாக ஓட்டினார்.
அப்போது அந்த வழியாக சாத்தூர் தாலுகா கோட்டூர் முத்துராமலிங்கபுரத்தை சேர்ந்த பாண்டி மகன் ராமராஜ் (43) என்பவர் லாரியில் சிமெண்டு பாரம் ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தார்.
எதிர்பாராதவிதமாக அப்புக்குட்டி ஓட்டி வந்த லாரி மீது ராமராஜ் லாரி மோதியது. இதில் லாரியின் முன்பக்கம் சேதம் அடைந்தது. இந்த விபத்தில் ராமராஜ் படுகாயம் அடைந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த திருவேங்கடம் போலீசார் விரைந்து வந்து ராமராஜை மீட்டு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருவேங்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story