சேலம் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை-ஓமலூரில் நடந்தது
சேலம் மாநகர், புறநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
ஓமலூர்:
சேலம் மாநகர், புறநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனை கூட்டம்
சேலம் மாநகர், புறநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஓமலூரில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது நடைபெற உள்ள நகராட்சி, மாநகராட்சி தேர்தல் குறித்து ஆலோசனை வழங்கினார். மேலும் சட்டசபை தேர்தலில் சேலம் மாவட்டத்தில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது போன்று மாநகராட்சி, நகராட்சி தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வெங்கடாசலம், அமைப்பு செயலாளர் செம்மலை, எம்.எல்.ஏ.க்கள் மணி, பாலசுப்பிரமணியம், முன்னாள் எம்.பி. பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வரவேற்பு
முன்னதாக கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த எடப்பாடி பழனிசாமிக்கு, ஓமலூர் எம்.எல்.ஏ. மணி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், சேரன் செங்குட்டுவன், மணிமுத்து, கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டு வரவேற்பு கொடுத்தனர்.
கூட்டம் முடிந்து எடப்பாடி பழனிசாமி கட்சி அலுவலகத்தை விட்டு வெளியே வந்தார். அப்போது அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு கொண்டு செல்லப்படும் வெள்ளியிலான ராமர் பாதம் அந்த வழியாக எடுத்து செல்லப்பட்டது. உடனே எடப்பாடி பழனிசாமி அந்த ராமர் பாதத்தை தொட்டு வணங்கினார்.
Related Tags :
Next Story