தர்மபுரியில் அமைச்சு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


தர்மபுரியில் அமைச்சு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Oct 2021 7:57 AM IST (Updated: 28 Oct 2021 7:57 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரியில் அமைச்சு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தர்மபுரி:
தமிழ்நாடு வேளாண்மைத்துறை அமைச்சு பணியாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் ஜெயவேல் தலைமை தாங்கினார். செயலாளர் ரேணுகா, பொருளாளர் அண்ணாதுரை, அரசு ஊழியர் சங்க மாநில துணைதலைவர் பழனியம்மாள், மாவட்ட தலைவர் சுருளிநாதன், செயலாளர் சேகர்,  பொருளாளர் புகழேந்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் காவேரி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
வேளாண் உதவி இயக்குனர் அலுவலகங்களுக்கு குறைந்தபட்சம் ஒரு கண்காணிப்பாளர், ஒரு உதவியாளர், ஒரு இளநிலை உதவியாளர், ஒரு தட்டச்சு பணியாளர் பணியிடத்தை உருவாக்கவேண்டும். வேளாண்மை துறையில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் வேளாண்மை துறை அமைச்சு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story