வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் குறைதீர் முகாம் அடுத்த மாதம் 10-ந் தேதி நடக்கிறது


வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் குறைதீர் முகாம் அடுத்த மாதம் 10-ந் தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 28 Oct 2021 11:08 AM IST (Updated: 28 Oct 2021 11:08 AM IST)
t-max-icont-min-icon

சென்னை தெற்கு மண்டல வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில் குறை தீர்க்கும் நிகழ்ச்சி நவம்பர் 10-ந்தேதி நடக்கிறது என சென்னை தெற்கு மண்டல வருங்கால வைப்பு நிதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சட்டம் 1952-ன் கீழ் பயன்பெறும் சந்தாதாரர்கள் மற்றும் ஊழியர்களின் குறைகளை விரைவில் தீர்த்து வைப்பதற்காக, ஒவ்வொரு மாதமும் 10-ந்தேதியன்று சென்னை பிராந்திய வருங்கால வைப்பு நிதி அலுவலகம் “வருங்கால வைப்பு நிதி உங்கள் அருகில்” (நிதி ஆப்கே நிகத்) என்ற பெயரில் குறை தீர்ப்பு நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. அந்தவகையில், சென்னை தெற்கு மண்டல வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் அலுவலக வளாகத்தில் நவம்பர் 10-ந்தேதி (புதன்கிழமை) குறை தீர்ப்பு நிகழ்ச்சி நடைபெறும். அன்றைய தினம் சந்தாதாரர்கள், ஓய்வூதியர்கள், ஊழியர்கள், தொடர்புடைய ஆவணங்களுடன் அலுவலகத்துக்கு நேரில் வந்து தங்களுடைய குறைகளை தெரிவிக்கலாம்.

மேற்கண்ட தகவல் சென்னை தெற்கு மண்டல வருங்கால வைப்பு நிதி கமிஷனர் பி.ஹங்சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story