ஓட்டப்பிடாரம் அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகளை உறவினர்கள் தானமாக வழங்கினர்


ஓட்டப்பிடாரம் அருகே விபத்தில்  மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகளை உறவினர்கள் தானமாக வழங்கினர்
x
தினத்தந்தி 28 Oct 2021 6:58 PM IST (Updated: 28 Oct 2021 6:58 PM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பிடாரம் அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகளை உறவினர்கள் தானமாக வழங்கினர்

ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகளை உறவினர்கள் தானமாக வழங்கினர்.
விபத்தில் காயம்
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே சங்கராஜபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்த மனோகரன் (வயது 29) கூலித்தொழிலாளி. இவரது மனைவி கார்த்திகா (24). இந்த தம்பதிக்கு அவந்திகா (6), கோபிசா (4) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 25-ம்தேதி அன்று இரவு பெற்றோர் வீட்டிலிருந்து ஓட்டப்பிடாரம் நோக்கி கார்த்திகா அவரது தந்தை கோவிந்தனுடன் மோட்டார் சைக்கிளில்  வந்து கொண்டிருந்தார். பாஞ்சாலங்குறிச்சி -ஓட்டப்பிடாரம் சாலையில் மாஞ்சாங்குளம் அருகே வந்த போது எதிர்பாராதவிதமாக கார்த்திகா நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதில் கார்த்திகாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலமாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 
மூளைச்சாவு
இந்த நிலையில் கார்த்திகாவுக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென மூளைச்சாவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கார்த்திகாவை காப்பாற்ற மருத்துவர்கள் முயற்சி செய்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை சிகிச்சை பலனில்லாமல் கார்த்திகா உயிரிழந்தார். 
உடல் உறுப்புகள் தானம்
மூளைச்சாவு அடைந்த கார்த்திகாவின் உடல் உறுப்புகளை அவரது உறவினர்கள் தானமாக வழங்க முன்வந்தனர். இதனைத்தொடர்ந்து மருத்துவர்கள் கார்த்திகாவின் இரண்டு கிட்னி, இருதயம், கண்கள் மற்றும் நுரையீரல் ஆகிய உடல் உறுப்புகளை அகற்றினர். தொடர்ந்து தனியார் ஆஸ்பத்திரியில் மதுரை ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் உதவியுடன் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் உடலை பெற்றுக் கொண்ட உறவினர்கள் நேற்று சொந்த ஊரில் அடக்கம் செய்தனர். அப்போது அவரது உடலை பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

Next Story