தொடக்க, நடுநிலை பள்ளிகளில் தூய்மை பணிகள் தீவிரம்
நீலகிரி மாவட்டத்தில் 1-ந் தேதி முதல் திறக்கப்படுவதால் தொடக்க, நடுநிலை பள்ளிகளில் தூய்மை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அங்கு பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் 1-ந் தேதி முதல் திறக்கப்படுவதால் தொடக்க, நடுநிலை பள்ளிகளில் தூய்மை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அங்கு பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
தூய்மை பணிகள்
கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்கள் வீடுகளில் இருந்தபடியே பாடங்களை படித்து வந்தனர். தற்போது கொரோனா பரவல் குறைந்ததால் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி வருகிற 1-ந் தேதி முதல் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
இதையொட்டி நீலகிரி மாவட்டத்தில் தூய்மை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் மற்றும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில்(6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை) உள்ள வகுப்பறைகள், வளாகங்கள் தண்ணீர் தெளித்து சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. மாணவர்கள் அமரும் இருக்கைகள் சுத்தப்படுத்தப்படுகிறது.
சமூக இடைவெளி
கழிப்பறைகள் மற்றும் குடிநீர் தேக்கி வைக்கும் தொட்டிகள் பிளிச்சிங் பவுடர் போட்டு தூய்மை செய்யப்படுகிறது. பள்ளி வளாகங்களை சுற்றி வளர்ந்துள்ள செடி, கொடிகள் அப்புறப்படுத்தப்படுகிறது. மேலும் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய 4 வட்டாரங்களில் அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் உள்பட 250-க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளது. 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளி விட்டு வகுப்பறைகளில் அமர வைக்க வேண்டும். உணவு இடைவேளையின்போது தனிமனித இடைவெளியை பின்பற்றி உணவருந்த வேண்டும்.
தடுப்பூசி
மாணவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்வதுடன், கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்த செய்ய வேண்டும். நீண்ட மாதங்களுக்கு பிறகு பள்ளிகளுக்கு வருவதால் மாணவர்களை உளவியல் ரீதியாக தயார்படுத்த வேண்டும்.
அதன்பின்னர் பாடங்களை நடத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆசிரியர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி 2 டோஸ் செலுத்தி இருக்க வேண்டும்.
பள்ளிகளில் பணிபுரியும் பணியாளர்களும் தடுப்பூசி செலுத்த வேண்டும். மேலும் பள்ளி மாணவர்களை அழைத்து செல்லும் வேன் டிரைவர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் தடுப்பூசி செலுத்தி இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story