பலத்த மழையால் மரம் சாய்ந்தது


பலத்த மழையால் மரம் சாய்ந்தது
x
தினத்தந்தி 28 Oct 2021 7:22 PM IST (Updated: 28 Oct 2021 7:22 PM IST)
t-max-icont-min-icon

பலத்த மழையால் மரம் சாய்ந்தது

குன்னூர்

குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் சூறாவளி காற்றும் வீசுகிறது. இதன் காரணமாக ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழும் சம்பவங்கள் நிகழ்கிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் குன்னூர் பகுதியில் பகலில் லேசாக மழை பெய்தது. பின்னர் மாலையில் பலத்த மழையாக கொட்டி தீர்த்தது. மேலும் இரவிலும் மழை தொடர்ந்தது. 

இதனால் நேற்று அதிகாலை 5.45 மணியளவில் குன்னூர்-கோத்தகிரி சாலையில் வட்டப்பாறை என்ற இடத்தில் மரம் சாய்ந்து விழுந்தது. இதனால் அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து குன்னூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த வீரர்கள் மின்வாள் மூலம் மரத்தை துண்டு துண்டாக வெட்டி அகற்றினர். தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரத்துக்கு பிறகு காலை 6.45 மணிக்கு அந்த வழியே மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.


Next Story