தட்டார்மடம் அருகே வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை


தட்டார்மடம் அருகே வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 28 Oct 2021 7:57 PM IST (Updated: 28 Oct 2021 7:57 PM IST)
t-max-icont-min-icon

தட்டார்மடம் அருகே வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்

சாத்தான்குளம்:
தட்டார்மடம் அருகே உசரத்துக்குடியிருப்பு பிராமணவிளையைச் சேர்ந்த துரைராஜ் மகன் ஜெகன் (வயது 23). சென்னை பூந்தமல்லியில் உள்ள மளிகை கடையில் வேலை பார்த்து வந்த இவர் சொந்த ஊருக்கு நேற்று முன்தினம் வந்துள்ளார். இரவு ஊரிலுள்ளகடைக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லையாம். இந்நிலையில் நேற்று காலையில்  வீட்டின் அருகில் உள்ள மரத்தில் ஜெகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து தட்டார்மடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story