அக்கரைப்பேட்டை மீனவர்களை விடுவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட அக்கரைப்பேட்டை மீனவர்களை விடுவிக்கக்கோரி சி.ஐ.டி.யூ. மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்:
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட அக்கரைப்பேட்டை மீனவர்களை விடுவிக்கக்கோரி சி.ஐ.டி.யூ. மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
நாகை தலைமை தபால் நிலையம் முன்பு சி.ஐ.டி.யூ. தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராமு, மாவட்ட பொருளாளர் காளியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில செயலாளர் ஜீவானந்தம், மாவட்டக்குழு உறுப்பினர் குருசாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
மீனவர்களை விடுவிக்க வேண்டும்
தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படையை கண்டிப்பது. இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட அக்கரைப்பேட்டை மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும். பறிமுதல் செய்யப்பட்ட மீனவர்களின் விசைப்படகுகளை திரும்ப கொடுக்க வேண்டும். தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திவரும் இலங்கை கடற்படை மீது மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story