சேறும், சகதியுமாக காணப்படும் அரசு அலுவலகங்கள் வளாகம்


சேறும், சகதியுமாக காணப்படும் அரசு அலுவலகங்கள் வளாகம்
x
தினத்தந்தி 28 Oct 2021 9:13 PM IST (Updated: 28 Oct 2021 9:13 PM IST)
t-max-icont-min-icon

வடகோவனூரில் சேறும், சகதியுமாக காணப்படும் அரசு அலுவலகங்களின் வளாகத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கூத்தாநல்லூர்:
வடகோவனூரில் சேறும், சகதியுமாக காணப்படும் அரசு அலுவலகங்களின் வளாகத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
சேறும், சகதி 
கூத்தாநல்லூர் அருகே உள்ள வடகோவனூரில் ஒரே வளாகத்தில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மகளிர் சுய உதவிக்குழு அலுவலகம் உள்ளிட்ட அரசு சார்ந்த அலுவலகங்கள் உள்ளன. 
இந்த அலுவலகங்கள் நிறைந்த வளாகத்தில் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களை சந்திப்பதற்கு வடகோவனூர் கிராமமக்கள் சென்று வருகின்றனர்.  மேலும்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களும் சென்று வருகின்றனர். இந்த அலுவலகங்கள் செல்லும் வளாகத்தில்  சேறும், சகதியுமாக காணப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மழை காலங்களில் வளாகத்தில் சேறும், சகதி ஏற்படுகிறது. 
பள்ளி மாணவர்கள் அவதி
இதனால் மழை காலங்களில் அந்த வளாகத்தில் சென்று வருவதில் மிகவும் சிரமம் ஏற்படுகிறது. அதேபோல் அரசு சார்ந்த அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவர்களும் சென்று வர அவதிப்பட்டு வருகி்ன்றனர். எனவே வடகோவனூரில் அரசு அலுவலகங்களுக்கு செல்லும் வளாகத்தில் மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக உள்ளதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story