விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Oct 2021 10:00 PM IST (Updated: 28 Oct 2021 10:00 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினா்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்ட விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் விழுப்புரத்தில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு  அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் வி.அர்ச்சுணன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர்கள் பி.கலியமூர்த்தி, எஸ்.அபிமன்னன் மாவட்ட துணைத்தலைவர் என்.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் கே.சுந்தரமூர்த்தி, கரும்பு வெட்டும் தொழிலாளர் சம்மேளன தலைவர் என்.பழனி, மாவட்ட பொருளாளர் கே.உலகநாதன் ஆகியோர் கலந்து கொண்டு தேசிய ஊரக வேலை திட்டத்தில் அனைவருக்கும் தொடர்ந்து வேலை வழங்கவேண்டும் என்றும், இதுவரை வேலை செய்த 5 வார சம்பள பாக்கியை உடனே வழங்க வேண்டும் என்றும், நூறு நாள் வேலைத் திட்டத்தை 200 நாட்களாக மாற்றி தினக்கூலியை ரூ.600 ஆக உயர்த்த வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றது. இதில்  அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த எம்.சேகர், வி.சுந்தரமூர்த்தி, ஆர்.மகேந்திரன், ராஜி, பஞ்சம்மாள், வடிவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story