மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்ட காவல் துறையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திருவண்ணாமலை அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு நகர செயலாளர் பிரகலநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சிவக்குமார் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து கண்டன உரையாற்றினார்.
அதில் திருவண்ணாமலை நகரில் ஏலச்சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்ய கோரியும், பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் நிலையத்தில் அளிக்கும் புகார்களை உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க கோரியும், மாவட்ட காவல் துறையை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வீரபத்திரன், பாரி, ராமதாஸ், செல்வம், வெங்கடேசன், மாவட்டக்குழு செல்வி, சந்திரசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story