ஆலமரம் விழுந்து வணிக வளாகம், மோட்டார் சைக்கிள்கள் சேதம்
கொங்கராம்பட்டில் சாலையோரம் நின்ற பெரிய ஆலமரம் விழுந்ததில் வணிக வளாகம், மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தன. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
கண்ணமங்கலம்
கொங்கராம்பட்டில் சாலையோரம் நின்ற பெரிய ஆலமரம் விழுந்ததில் வணிக வளாகம், மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தன. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
ஆலமரம் விழுந்து சேதம்
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே ஆரணி செல்லும் ரோட்டில் கொங்கராம்பட்டு கேட் பகுதியில் தனியார் வணிக வளாகம் முன்பு சாலையோரம் இரண்டு ஆலமரங்கள் இருந்தது.
இதில் ஒன்று நேற்று மாலை தானாக சாய்ந்து விழுந்தது. வணிகவளாகம் மீது விழுந்ததில் வணிக வளாக பால்கனி, தகர கொட்டகை, அதன் கீழ் இருந்த 4 மோட்டார் சைக்கிள்கள் சேதமானது. இந்த நேரத்தில் அந்தப்பகுதியில் ஆட்கள் யாரும் இல்லாததால் உயிர்ச் சேதம் இல்லை.
இதுபற்றி தகவல் அறிந்ததும் கொங்கராம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சுகுணா நாராயணன், மேற்கு ஆரணி ஒன்றியக் குழு துணைத் தலைவர் வேலாயுதம் மற்றும் கண்ணமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் பொக்லைன் எந்திரம் மூலம் மரத்தை அப்புறப்படுத்தினர்.
போக்குவரத்து பாதிப்பு
மரம் விழுந்ததால் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஆலமரம் விழுந்து கிடந்த இடத்தை மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் கடக்க முயன்றனர்.
அப்போது தீடிரென ஆலமரம் உருண்டு விழுந்ததில் சிலர் சிக்கிக்கொண்டனர். அவர்களை அப்பகுதி மக்கள் மீட்டனர்.
இதே பகுதியில் இன்னொரு பெரிய ஆலமரம் எப்போதும் விழுந்து விடும் நிலையில் உள்ளது.
எனவே இந்த ஆலமரத்தை நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக விரைந்து அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்களும், வியாபாரிகளும் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story