மின்சாரம் பாய்ந்து ஊழியர் பலி


மின்சாரம் பாய்ந்து ஊழியர் பலி
x
தினத்தந்தி 28 Oct 2021 10:16 PM IST (Updated: 28 Oct 2021 10:16 PM IST)
t-max-icont-min-icon

உயர்மின் அழுத்த கோபுரத்தில் நடந்த சீரமைப்பு பணியின்போது மின்சாரம் பாய்ந்து ஊழியர் பலியானார்.

கடமலைக்குண்டு:

தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டியை சேர்ந்தவர் விக்னேஷ்வரன் (வயது 25). இவர், தேனி மின்வாரியத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் கடமலைக்குண்டு அருகே அய்யனார்புரத்தில் உள்ள உயர்மின் அழுத்த கோபுரத்தில் விக்னேஷ்வரன் மற்றும் சில ஊழியர்கள் நேற்று சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

உயர்மின் அழுத்த கோபுரம் அருகே இருந்த மரத்தை வெட்டும் பணியில் விக்னேஷ்வரன் ஈடுபட்டிருந்தார். அப்போது, மரக்கிளை திடீரென மின்கம்பியில் உரசியது. இதில் விக்னேஷ்வரன் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.

 படுகாயத்துடன் உயிருக்கு போராடிய அவரை சக ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக, தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே விக்னேஷ்வரன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கடமலைக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story