பரமத்திவேலூர் அருகே சூயிங்கம் தொண்டையில் சிக்கி குழந்தை சாவு


பரமத்திவேலூர் அருகே சூயிங்கம் தொண்டையில் சிக்கி குழந்தை சாவு
x
தினத்தந்தி 28 Oct 2021 10:33 PM IST (Updated: 28 Oct 2021 10:33 PM IST)
t-max-icont-min-icon

பரமத்திவேலூர் அருகே சூயிங்கம் தொண்டையில் சிக்கி குழந்தை சாவு

பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் அருகே சூயிங்கம் தொண்டையில் சிக்கி 2½ வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.
சமையல் மாஸ்டர்
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகா நாகதாசம்பட்டி பகுதியை சேர்ந்தவர் இளவரசன் (வயது26). இவர் தற்போது தனது மனைவி வைஷாலியுடன் பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூர் தண்ணீர் பந்தல்மேடு பகுதியில் ‌‌‌தங்கி ஒரு உணவு விடுதியில் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார்.
இந்த தம்பதியினருக்கு உஷாரிகா என்ற 2½ வயது மகள் இருந்தாள். இந்தநிலையில் குழந்தை உஷாரிகா நேற்று முன்தினம் சூயிங்கம் சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதில் சூயிங்கம் குழந்தை உஷாரிகாவின் தொண்டையில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. 
விசாரணை
இதை பார்த்த குழந்தையின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து உடனடியாக வேலூர் அரசு மருத்துவமணைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை உஷாரிகா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2½ வயது குழந்தை சூயிங்கம் சாப்பிட்டு தொண்டையில் சிக்கி மூச்சு திணறி இறந்தது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story