இளம்பெண் சாவில் திடீர் திருப்பம்: தற்கொலைக்கு தூண்டிய கணவர் கைது


இளம்பெண் சாவில் திடீர் திருப்பம்: தற்கொலைக்கு தூண்டிய கணவர் கைது
x
தினத்தந்தி 28 Oct 2021 10:33 PM IST (Updated: 28 Oct 2021 10:33 PM IST)
t-max-icont-min-icon

இளம்பெண் சாவில் திடீர் திருப்பம்: தற்கொலைக்கு தூண்டிய கணவர் கைது

நாமக்கல்:
நாமக்கல் அருகே இளம்பெண் சாவில் திடீர் திருப்பமாக அவரது கணவரை தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் கைது செய்துள்ளனர்.
காதல் திருமணம்
நாமக்கல் அருகே உள்ள தூசூரை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 23). கட்டிட மேஸ்திரி. இவர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சேந்தமங்கலத்தை சேர்ந்த சிந்துஜா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சிந்துஜா வீட்டில் உள்ள ஒரு அறையில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கினார். அவரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் இறந்து விட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே சிந்துஜாவுக்கு திருமணமாகி 8 மாதங்களே ஆவதால், அவரது சாவுக்கான காரணம் குறித்து நாமக்கல் உதவி கலெக்டர் மஞ்சுளாவும் விசாரணை நடத்தினார்.
கணவர் கைது
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் திடீர் திருப்பமாக இளம்பெண் சிந்துஜாவை அவரது கணவர் தற்கொலைக்கு தூண்டி இருப்பது தெரியவந்தது. இதை அடுத்து ரஞ்சித்குமாரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
இதற்கிடையே சிந்துஜாவுக்கு 18 வயது பூர்த்தியாகும் முன்பே திருமணம் நடைபெற்று இருப்பதும் தெரியவந்தது. எனவே ரஞ்சித்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் 18 வயது பூர்த்தி அடையாத சிறுமியை திருமணம் செய்து வைத்ததாக ரஞ்சித்குமார் தந்தை கருப்பண்ணன் (47), தாயார் மணிமேகலை (44) ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story