அரக்கோணம் அருேகெ பண் அடித்து கொலை
அரக்கோணம் அருேக மரச் சட்டத்தால் அடித்து ெபண் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரக்கோணம்
அரக்கோணம் அருேக மரச் சட்டத்தால் அடித்து ெபண் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
கணவன்-மனைவி தகராறு
அரக்கோணத்தை அடுத்த நாகவேடு பகுதியைச் சேர்ந்தவர் குப்பன். இவரின் மனைவி புஷ்பா. இவர்களின் மகன் ரமேஷ். இவருடைய மனைவி ரேவதி.
ரமேசுக்கும், ரேவதிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. 14-ந்தேதி அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து ரமேசின் தாயார் புஷ்பா, மருமகள் ரேவதியிடம் கேட்டுள்ளார். இதனால் மாமியார், மருமகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தங்கையின் மாமியாருக்கு மரச்சட்டத்தால் அடி
இதற்கிடையே, திருவள்ளூர் மாவட்டம் கூவம் பகுதியில் வசித்து வரும் ரேவதியின் தந்தை நீலமேகம், அண்ணன் சதீஷ்குமார், இவரின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தக்கோலத்தில் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, நாகவேட்டில் உள்ள ரேவதியை பார்ப்பதற்காக நாகவேடுக்கு வந்தனர்.
அவர்கள் வந்த நேரத்தில் ரேவதிக்கும், புஷ்பாவுக்கும் இடைேய வாக்குவாதம் ஏற்பட்டதை கண்ட சதீஷ்குமார், எதற்காக எனது தங்கையிடம் தகராறு செய்கிறாய்? எனக் கேட்டு புஷ்பாவிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். அதில் ஆத்திரம் அடைந்த சதீஷ்குமார் அங்கு கிடந்த ஒரு மரச் சட்டத்தை எடுத்து புஷ்பாவை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.
3 ேபர் கைது
அதில் படுகாயமடைந்த அவரை குடும்பத்தினர் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளித்து, பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ேநற்று புஷ்பா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சேதுபதி மற்றும் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக சதீஷ்குமார், நண்பர்கள் பாலாஜி, தட்சிணாமூர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
Related Tags :
Next Story