மின்வாரிய ஊழியர் மீது தாக்குதல்
விருதுநகரில் மின்வாரிய ஊழியரை தாக்கிய 2 பேர் மீது வழக்குபதிவு செய்து உள்ளனர்.
விருதுநகர்,
விருதுநகர் சத்திரரெட்டியபட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிப்பவர் பாலச்சந்திரன் என்ற சுந்தர். இவரது நண்பர் மகேந்திரன். இருவரும் மின்வாரியத்தில் பணியாற்றி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர்.இந்த நிலையில் நேற்று பாலசந்திரன் மதுரை ரோட்டில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது போக்குவரத்து கழக பணிமனை அருகே மகேந்திரனும் அவருடன் வந்த மற்றொரு நபரும் பாலச்சந்திரனை வழிமறித்து தாக்கி படுகாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுபற்றி பாலச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் பாண்டியன்நகர் போலீசார் மகேந்திரன் உள்பட 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Related Tags :
Next Story