பழங்காலத்தில் விவசாயிகள் பயன்படுத்திய வேளாண்மை கருவிகளை அருங்காட்சியகத்திற்கு வழங்கலாம்


பழங்காலத்தில் விவசாயிகள் பயன்படுத்திய வேளாண்மை கருவிகளை அருங்காட்சியகத்திற்கு வழங்கலாம்
x
தினத்தந்தி 28 Oct 2021 11:00 PM IST (Updated: 28 Oct 2021 11:00 PM IST)
t-max-icont-min-icon

பழங்காலத்தில் விவசாயிகள் பயன்படுத்திய வேளாண்மை கருவிகளை அருங்காட்சியகத்திற்கு வழங்கலாம் என்று இணை இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை, 
பழங்காலத்தில் விவசாயிகள் பயன்படுத்திய வேளாண்மை கருவிகளை அருங்காட்சியகத்திற்கு வழங்கலாம் என்று இணை இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.
அருங்காட்சியகம்
சிவகங்கை மாவட்டத்தில் பழங்காலத்தில் விவசாயிகள் பயன்படுத்திய வேளாண்மை கருவிகள் மற்றும் வேளாண் சம்பந்தப்பட்ட பொருட்கள் இருந்தால் தமிழக அரசின் மாநில அளவிலான மரபுசாரா வேளாண்மை அருங் காட்சியகத்தில் காட்சிப்படுத்துவதற்காக வழங்கலாம் என்று வேளாண்மை இணை இயக்குனர் வெங்கடேசுவரன் தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-
பழங்காலத்தில் விவசாயிகள் பயன்படுத்திய வேளாண்மை கருவிகள், நாட்டுப்புற விவசாய பாடல்கள், ஓவியங்கள் மற்றும் பாரம்பரிய நெல், சிறுதானிய ரகங்கள் முன்னோடி விவசாயிகளிடம் இருந்து சேகரிக்கப்படுகின்றன. இவ்வாறு சேகரிக்கப்படும் பொருட்கள் தமிழக அரசின் சார்பில் சென்னையில் அமைக்கப்பட உள்ள மரபு சார் வேளாண் அருங்காட்சியகத்தில் அது தொடர்பான விவரங்களுடன் காட்சிப்படுத்தப்பட உள்ளது.
பாரம்பரிய பயிர்
எனவே சிவகங்கை மாவட்ட விவசாயிகள் தங்களிடம் உள்ள பாரம்பரியம் மிக்க மரபுசார் வேளாண் கருவிகளையும், பாரம்பரிய பயிர் ரகங்கள் குறித்து தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களிடம் தெரிவிக்கலாம் . ஆய்வுக்கு பின் அதனை வருகிற 31.10.2021-க்குள் ஒப்படைக்கலாம். இது தொடர்பான விவரங்களுக்கு 94431 99101 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story