குடியாத்தத்தில் மின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்து வடமாநில வாலிபர் பலி


குடியாத்தத்தில் மின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்து வடமாநில வாலிபர் பலி
x
தினத்தந்தி 28 Oct 2021 11:01 PM IST (Updated: 28 Oct 2021 11:01 PM IST)
t-max-icont-min-icon

மின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்து வடமாநில வாலிபர் பலி

குடியாத்தம்

குடியாத்தம் மேல்ஆலத்தூர் ரோடு பகுதியில் மின் கம்பங்கள் நடும் பணியில் மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டம் ஷியாம்சுந்தரி நகர் அட்டாட்லா பகுதியைச் சேர்ந்த பின்டு மண்டல் (வயது 23) என்பவர் ஈடுபட்டிருந்தார். நேற்று மதியம் மின்கம்பம் நடும் பணியின் போது கம்பத்தில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். அவரை, உடன் பணியாற்றியவர்கள் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்துவிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்துபோன தொழிலாளி பின்டு மண்டலுக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.


Next Story