கல்லால் தாக்கி கல்லூரி மாணவர் கொலை


கல்லால் தாக்கி கல்லூரி மாணவர் கொலை
x
தினத்தந்தி 28 Oct 2021 11:21 PM IST (Updated: 28 Oct 2021 11:21 PM IST)
t-max-icont-min-icon

கல்லால் தாக்கி கல்லூரி மாணவர் கொலை

ஓசூர், அக்.29-
ஓசூரில் கல்லால் தாக்கி கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த பயங்கர கொலை குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கல்லூரி மாணவர் பிணம்
ஓசூர் பாரதிதாசன்நகர் அருகே வள்ளுவர் நகர் முனீஸ்வரன் கோவில் பின்புறம் அடையாளம் தெரியாத ஆண் உடல் கிடந்தது. தகவல் அறிந்த ஓசூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அங்கு வாலிபர் ஒருவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கொலை செய்யப்பட்டு கிடந்தது ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் பிரதட்டூர் கிராமத்தைச் சார்ந்த மகபூப் பாஷா மகன் சேக் முகமது அப்சல் (வயது21) என்பதும், கல்லூரி மாணவர் என்பதும் தெரியவந்தது.
போலீசார் விசாரணை
இதற்கிடையில் சம்பவ இடத்திற்கு ஓசூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சிவலிங்கம், கிருஷ்ணகிரி கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ ஆகியோரும் நேரில் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் பிணமாக கிடந்த ஷேக் முகமது அப்சலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் வெளியான தகவல்கள் விவரம் வருமாறு:- ஷேக் முகமது அப்சல் தன்னுடைய தம்பியுடன் ஓசூர் ராம்நகரில் உள்ள தாய்மாமனான ஆட்டோ டிரைவர் உசேன் பாஷா வீட்டில் தங்கி இருந்து ஒசூர் அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்சி. கம்ப்யூட்டர் இரண்டாமாண்டு படித்து வந்துள்ளார்.
பரபரப்பு
மதியத்துக்கு பிறகு அவர் தனியார் தொழிற்சாலையில் இரவு 1 மணிவரை பகுதி நேர ஊழியராக வேலை செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் கல்லூரி முடிந்து தொழிற்சாலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதற்கிடையேதான் ஷேக் முகமது அப்சல் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். அவரை கொலை செய்தது யார்?, எதற்காக கொலை செய்தனர்? என்ற விவரம் தெரியவில்லை. இதுதொடர்பாக போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். கல்லூரி மாணவர் கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Next Story