வாடகை வாகனங்களுக்கு அனுமதி இல்லை
ஐகோர்ட்டு உத்தரவின்படி வாடகை வாகனங்களுக்கு அனுமதி இல்லை
ராமநாதபுரம்,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த சங்கிலி என்பவர் பசும்பொன் முத்துராமலிங்கதேவர் குருபூஜை விழாவிற்கு பொதுமக்கள் செல்ல வாடகை வாகனங்களை அனுமதிக்க கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்ச் நீதிபதிகள் கடந்த 2017 -ம் ஆண்டு உயர்நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் படி விதிக்கப்பட்ட தடைகள் தொடரும் எனவும், கொரோனா பரவுதலை கட்டுப்படுத்தும் நோக்கில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டரால் வெளியிடப்பட்ட 144 தடை உத்தரவு அமலில் உள்ளதாலும் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். எனவே ஐகோர்ட்டு உத்தரவின்படி பசும்பொன் குருபூஜை விழாவிற்கு வாடகை வாகனங்களில் வர அனுமதி இல்லை. இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story