சுவாமிமலை பகுதியில் ஆன்லைன் லாட்டரி விற்ற 2 பேர் கைது 7 செல்போன்கள் பறிமுதல்
சுவாமிமலை பகுதியில் கேரள மாநில ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 7 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கபிஸ்தலம்:-
சுவாமிமலை பகுதியில் கேரள மாநில ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 7 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆன்லைன் லாட்டரி
தஞ்சை மாவட்டம் சுவாமிமலையில் கேரள மாநில ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி அவர் தனிப்பிரிவு போலீஸ் மாரியப்பன், ஏட்டு உமாபதி மற்றும் போலீசாருடன் சுவாமிமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கண்காணிப்பு பணி மேற்கொண்டார்.
அப்போது பாபுராஜபுரம் பர்மா நகரை சேர்ந்த பக்கிரிசாமி (வயது38), ராமசாமி (58) ஆகிய 2 பேரிடம் போலீசார் சந்தேகத்தின்பேரில் விசாரணை நடத்தினர். விசாரணையில் இவர்கள் கேரள மாநில லாட்டரியை ஆன்லைன் மூலமாக விற்பனை செய்ததும், பரிசு விழும் நபருக்கு அதற்கான தொகையை வங்கி கணக்கில் ஆன்லைன் மூலமாக வரவு வைத்ததும் தெரியவந்தது.
செல்போன்கள் பறிமுதல்
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு பக்கிரிசாமி, ராமசாமி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் ஆன்லைன் லாட்டரி விற்பனைக்கு பயன்படுத்திய 7 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story