வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்


வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 28 Oct 2021 11:38 PM IST (Updated: 28 Oct 2021 11:38 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் முருகம்பாளையம் பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1100 கிலோ ரேஷன் அரிசியை உணவு பாதுகாப்பு பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

வீரபாண்டி
திருப்பூர் முருகம்பாளையம் பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1,100 கிலோ ரேஷன் அரிசியை உணவு பாதுகாப்பு பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
 ரேஷன் அரிசி பதுக்கல்
திருப்பூர் முருகம்பாளையம் பகுதியில் சிலர் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக உணவு பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் முருகம்பாளையம் பகுதியில் நேற்று இரவு சோதனை நடத்தப்பட்டது. இதில் உணவு பாதுகாப்பு அதிகாரி குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை மற்றும் உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், பறக்கும் படை தனி வருவாய் ஆய்வாளர் கார்த்திக் குமார், திருப்பூர் தெற்கு தனி வருவாய் ஆய்வாளர் ராஜா மற்றும் திருப்பூர் தெற்கு தனி தாசில்தார் பறக்கும் படை தாசில்தார் சுந்தரம் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
அவர்கள் முருகம்பாளையம் காதுகேளாதோர் பள்ளி அருகே மாவு அரைத்து கொடுக்கப்படும் ஒரு கடையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் கடை நடத்தி வந்த கார்த்திக் (வயது 35) என்பவர் அங்கிருந்து தப்பிச்சென்றார். 
1,100 கிலோ பறிமுதல்
மேலும் அதே பகுதியில் உள்ள அவரது வீட்டில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டில் ரேஷன் அரிசி 15 மூட்டையில் 1100 கிலோ அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. 
இதனைத் தொடர்ந்து தலைமறைவாக உள்ள கார்த்திக் மீது உணவு பாதுகாப்பு அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story