வேலூர் அருகே பிறந்து சில நாட்களேயான ஆண் குழந்தை கோவில் வளாகத்தில் வீச்சு


வேலூர் அருகே பிறந்து சில நாட்களேயான ஆண் குழந்தை கோவில் வளாகத்தில் வீச்சு
x
தினத்தந்தி 28 Oct 2021 11:47 PM IST (Updated: 28 Oct 2021 11:47 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் அருகே பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தை கோவில் வளாகத்தில் வீசப்பட்டுகிடந்தது. குழந்தையை வீசிச்சென்ற கல் நெஞ்சம் கொண்ட தாயை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

வேலூர்

வேலூர் அருகே பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தை கோவில் வளாகத்தில் வீசப்பட்டுகிடந்தது. குழந்தையை வீசிச்சென்ற கல் நெஞ்சம் கொண்ட தாயை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கோவில் வளாகத்தில் ஆண்குழந்தை

வேலூரை அடுத்த பலவன்சாத்து குப்பத்தில் செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் இருந்து நேற்று இரவு 9.30 மணியளவில் குழந்தை ஒன்று அழும் சத்தம் வெகுநேரமாக கேட்டது. இதையடுத்து அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது கோவில் வளாகத்தில், பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை வீசப்பட்டிருப்பது தெரிய வந்தது.

அதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் கோவில் வளாக பகுதியில் யாராவது உள்ளார்களா என்று தேடிப்பார்த்தனர். ஆனால் யாரும் இல்லை.

கல் நெஞ்சம் கொண்ட தாய் யார்?

இதையடுத்து பொதுமக்கள் உடனடியாக பாகாயம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுபா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் அங்கு சென்று ஆண் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அந்த குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவித்தனர். அந்த குழந்தை தொடர்ந்து டாக்டர்களின் கண்காணிப்பு மற்றும் பராமரிப்பில் உள்ளது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் வளாகத்தில் ஆண்குழந்தையை வீசிச்சென்ற கல்நெஞ்சம் கொண்ட தாய் யார்?, எதற்காக வீசிச்சென்றனர் என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தகாத உறவினால் பிறந்த குழந்தையாக இருக்கலாமோ அல்லது குடும்ப தகராறில் குழந்தையை யாராவது கோவிலில் வைத்து சென்றார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story