‘தினத்தந்தி நகர்வலம்’ செய்தி எதிரொலி: அரசு பள்ளி சத்துணவு கூடத்தில் அதிகாரி ஆய்வு
‘தினத்தந்தி நகர்வலம்’ செய்தி எதிரொலியாக அரசு பள்ளி சத்துணவு கூடத்தில் அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.
லாலாபேட்டை,
சத்துணவு கூடம்
லாலாபேட்டையை அடுத்த கள்ள பள்ளி ஆதிதிராவிடர் காலனியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஆதிதிராவிடர் பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியின் சத்துணவு கூடம் மிகவும் பழுதடைந்து இடியும் நிலையில் உள்ளது. இதுகுறித்து ‘தினத்தந்தி நகர்வலத்தில்’ நேற்று படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.
அதிகாரி ஆய்வு
இதையடுத்து, கிருஷ்ணராயபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் அந்த பள்ளிக்கு விரைந்து சென்று சத்துணவு கூட கட்டிடத்தை பார்வையிட்டார். மேலும், தற்காலிகமாக மாற்று இடத்தில் சமையல் கூடம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது
இந்த கட்டிடத்தை இடித்து புதிய கட்டிடம் கட்ட மாவட்ட கலெக்டருக்கு கடிதம் எழுதப்பட்டது. . இந்த ஆய்வின்போது பள்ளி தலைமையாசிரியர் வாசுகி உடனிருந்தார்.
‘தினத்தந்தி நகர்வலம்’ செய்தி எதிரொலியாக அரசு பள்ளி சத்துணவு கூடத்தில் அதிகாரி ஆய்வு மேற்கொண்டதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும், செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிக்கும் நன்றியை தெரிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story