விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்கும் போராட்டம்


விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்கும் போராட்டம்
x
தினத்தந்தி 29 Oct 2021 12:40 AM IST (Updated: 29 Oct 2021 12:40 AM IST)
t-max-icont-min-icon

மணல்குவாரிகளை திறக்க கோரி விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

விருத்தாசலம், 

விருத்தாசலம் பகுதியில் மாட்டுவண்டி மணல் குவாரி திறக்க வேண்டும், மூடப்பட்ட அனைத்து மணல் குவாரிகளையும் உடனடியாக மீண்டும் திறக்க வேண்டும், போலீசார் பறிமுதல் செய்த அனைத்து மாட்டு வண்டிகளையும் விடுவிக்கவேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  விருத்தாசலம் வட்ட மாட்டுவண்டி விவசாய தொழிலாளர்கள் நலச்சங்கத்தினர் விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் தங்களது ரேஷன் கார்டுகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.
 அதன்படி மாட்டுவண்டி விவசாய தொழிலாளர்கள் நலச்சங்க தலைவர் வெங்கடேசன் தலைமையில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ரேஷன் கார்டுகள்

 பின்னர் அலுவலகத்தின் உள்ளே சென்ற மாட்டுவண்டி தொழிலாளர்கள் கலெக்டரின் நேர்முக உதவியாளர் அரங்கநாதனிடம் தங்களது ரேஷன் கார்டுகள், வாக்காளர் அட்டைகள், ஆதார் அ்ட்டைகளை கொடுக்க முயன்றனர். அப்போது அவர்களை சமாதானப் படுத்திய நேர்முக உதவியாளர் அரங்கநாதன், கோரிக்கைகள் அனைத்தையும் விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். அதனை ஏற்று மாட்டுவண்டி தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story