பெண் விஷம் குடித்து தற்கொலை
பணகுடி அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பணகுடி:
பணகுடியை அடுத்த வடலிவிளை நடுத்தெருவை சேர்ந்தவர் கனகலிங்கம் (40), விவசாயி. இவருடைய மனைவி எஸ்தர் பபிதா (வயது 33) இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று ஏற்பட்ட குடும்ப தகராறில் மனம் வெறுப்படைந்த எஸ்தர் பபிதா விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் அவர் இறந்தார். தகவல் அறிந்ததும் பணகுடி போலீசார் எஸ்தர் பபிதா உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Related Tags :
Next Story