நாட்டிலேயே முதல்முறை பெங்களூருவில் தபால்களை வினியோகிக்க ஊழியர்களுக்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
நாட்டிலேயே முதல் முறையாக பெங்களூருவில் தபால்களை வினியோகிக்க ஊழியர்களுக்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வழங்கப்பட்டுள்ளது.
பெங்களூரு:
தபால் ஊழியர்கள்
கடந்த காலங்களில் தபால் நிலையத்திற்கு வரும் தபால்களை, நடைபயணமாக சென்றும், சைக்கிள்களில் சென்றும் தபால் ஊழியர்கள் வினியோகம் செய்து வந்தனர். தற்போது தபால் ஊழியர்கள் தபால்களை இருசக்கர வாகனங்கள் மூலம் வினியோகித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பெங்களூருவில் ஒரு தபால் நிலையத்தில் ஊழியர்கள் தபால்களை வினியோகம் செய்ய எலெக்ட்ரானிக் ஸ்கூட்டர்கள் வாங்கப்பட்டு உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வினியோகம்
பெங்களூரு ஜே.பி.நகர் பகுதியில் துணை தபால் நிலையம் உள்ளது. அந்த தபால் நிலையத்தில் பணியாற்றும் தபால் ஊழியர்களுக்கு தான் தபால்களை வீடு, வீடாக வினியோகம் செய்ய எலெக்ட்ரானிக் ஸ்கூட்டர்கள் வாங்கி கொடுக்கப்பட்டு உள்ளது. இதன் சேவை நேற்று முன்தினம் முதல் தொடங்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து அந்த தபால் நிலையத்தின் தலைமை தபால் அதிகாரி தாஸ் கூறும்போது, அக்டோபர் 14-ந் தேதி முதல் தபால் வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது.
நாட்டிலேயே முதன்முறையாக...
இதையடுத்து எங்களது ஊழியர்களுக்கு எலெக்ட்ரானிக் ஸ்கூட்டர்களை வாங்கி கொடுத்து உள்ளோம். இந்த எலெக்ட்ரானிக் ஸ்கூட்டர்களை தினமும் சார்ஜ் செய்ய வேண்டும். இதற்காக தபால் நிலையத்தின் ஒரு பகுதியில் சார்ஜிங் மையம் தொடங்கப்படும் என்றார்.
நாட்டிலேயே முதல்முறை இந்த தபால் நிலையத்தில் தான் ஊழியர்களுக்கு எலெக்ட்ரானிக் ஸ்கூட்டர்கள் வாங்கி கொடுக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story