ஆற்றில் மீனுக்காக கட்டப்பட்ட வலையில் சிக்கிய மலைப்பாம்பு
ஆற்றில் மீனுக்காக கட்டப்பட்ட வலையில் சிக்கிய மலைப்பாம்பு மீட்கப்பட்டது.
மங்களமேடு:
வேப்பந்தட்டை தாலுகா மங்களமேட்டை அடுத்துள்ள ரஞ்சன்குடி கோட்டை அருகே பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஆற்றுப்பகுதியில் சிலர் மீன் பிடிக்க வலை கட்டி வைத்திருந்தனர். ஆனால் அந்த வலையில் ஒரு மலைப்பாம்பு சிக்கிக்கொண்டு நகர முடியாமல் இருந்தது. இது குறித்து பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் செந்தில்குமார், துரைசாமி, சரண்சிங், மாதேஷ், பால்ராஜ் ஆகியோர் விரைந்து வந்து மலைப்பாம்பை மீன் வலையில் இருந்து பத்திரமாக மீட்டு அயன் பேரையூர் வனப்பகுதிக்குள் கொண்டு போய் விட்டனர்.
Related Tags :
Next Story