மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல்


மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல்
x
தினத்தந்தி 29 Oct 2021 2:30 AM IST (Updated: 29 Oct 2021 2:30 AM IST)
t-max-icont-min-icon

மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல் செய்யப்பட்டது.

விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள கொலையனூர் பகுதியில் மாட்டு வண்டியில் மணல் கடத்தப்படுவதாக உல்லியக்குடி கிராம நிர்வாக அதிகாரி ரஜினிக்கு(வயது 37) நேற்று காலை தகவல் கிடைத்தது. இது பற்றி விக்கிரமங்கலம் போலீசாருக்கு ரஜினி தகவல் தெரிவித்தார். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் ஆதிச்சனூர் ஓடையில் இருந்து கொலையனூர் பகுதிக்கு மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்தவரை மடக்கிப் பிடிக்க முயன்றனர். ஆனால் மாட்டு வண்டியை ஓட்டி வந்தவர் மாட்டு வண்டியை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து மாட்டு வண்டியை பறிமுதல் ெசய்த போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய நபரை தேடி வருகிறார்கள்.

Next Story