ஆனைவாரி முட்டல் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்ட வனப்பணியாளர்கள், சுற்றுலா பார்வையாளர்களுக்கு பாராட்டு


ஆனைவாரி முட்டல் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்ட வனப்பணியாளர்கள், சுற்றுலா பார்வையாளர்களுக்கு பாராட்டு
x
தினத்தந்தி 29 Oct 2021 3:31 AM IST (Updated: 29 Oct 2021 3:40 AM IST)
t-max-icont-min-icon

ஆனைவாரி முட்டல் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்ட வனப்பணியாளர்கள், சுற்றுலா பார்வையாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

சேலம்:
ஆனைவாரி முட்டல் நீர்வீழ்ச்சியில் கடந்த 24-ந் தேதி திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் கள்ளக்குறிச்சி உலகியநல்லூர் கிராமத்தை சேர்ந்த சிவரஞ்சினி தனது கைக்குழந்தையுடன் சிக்கினார். அவர்களை, வனக்காப்பாளர் கார்த்திக்,  வனக்காவலர் காவேந்திரன் மற்றும் சுற்றுலா பார்வையாளர்களான ஆத்தூரை சேர்ந்த அப்துல் ரகுமான், பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த லட்சுமணன், கள்ளக்குறிச்சி வெள்ளிமலை பகுதியை சேர்ந்த சண்முகம் ஆகியோர் மீட்பு பணியில் ஈடுபட்டு காப்பாற்றினர்.அவர்களை நேற்று சேலம் மண்டல வனப்பாதுகாவலர் பெரியசாமி நேரில் அழைத்து பொன்னாடை போர்த்தி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வனஅலுவலர் கவுதம், ஆத்தூர் உதவி வனப்பாதுகாவலர் முருகன், வனச்சரக அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story