கோவிலில் விளக்கு தீயில் பட்டு மூதாட்டி சேலையில் எரிந்த தீயை அணைத்த போக்குவரத்து போலீஸ்காரர்


கோவிலில் விளக்கு தீயில் பட்டு மூதாட்டி சேலையில் எரிந்த தீயை அணைத்த போக்குவரத்து போலீஸ்காரர்
x
தினத்தந்தி 29 Oct 2021 11:57 AM IST (Updated: 29 Oct 2021 11:57 AM IST)
t-max-icont-min-icon

கோவிலில் விளக்கு தீயில் பட்டு மூதாட்டி சேலையில் எரிந்த தீயை அணைத்த போக்குவரத்து போலீஸ்காரர் செந்தில்குமாரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

சென்னை கொளத்தூரை சேர்ந்தவர் அம்சா (வயது 89). இவர், திரு.வி.க. நகர், அகரம் சந்திப்பில் உள்ள கிருஷ்ணர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். அங்கு ஏற்றி இருந்த விளக்கு தீயில் மூதாட்டி அணிந்து இருந்த சேலை பட்டது. இதில் சேலையில் தீப்பிடித்து மளமளவென பரவியது. இதனால் மூதாட்டி அம்சா அலறினார். அப்போது கோவிலுக்கு வெளியே போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் இருந்த போக்குவரத்து போலீஸ் ஏட்டு செந்தில்குமார், இதை பார்த்து ஓடி வந்து மூதாட்டியின் சேலையில் எரிந்த தீயை போராடி அணைத்தார். 

இதில் செந்தில்குமாரின் கைகளில் காயம் ஏற்பட்டது. உடனடியாக தீயை அணைத்து விட்டதால் மூதாட்டி அம்சா, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. மூதாட்டி சேலையில் எரிந்த தீயை போராடி அணைத்த போக்குவரத்து போலீஸ் ஏட்டு செந்தில்குமாரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.


Next Story