திருவள்ளூர் வாகன சோதனையின் போது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது கார் ஏற்றி கொல்ல முயற்சி
வாகன சோதனையின் போது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது கார் ஏற்றி கொல்ல முயற்சி செய்ததாக இலங்கை வாலிபர் சூர்யாவை கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலை, பாலகிருஷ்ணாபுரம் சந்திப்பில் நேற்று சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை சந்தேகத்தின் பேரில் போலீசார் நிறுத்த முயற்சித்தனர். அப்போது அந்த கார் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தை இடித்து தள்ளி விட்டு நிற்காமல் சென்றது.
போலீசார் தூரத்தி சென்று அந்த காரை மடக்கி பிடித்தனர். போலீசார் விசாரணையில், காரை ஓட்டி வந்தது கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் கிளிநொச்சியை சேர்ந்த சூர்யா என்கிற தர்மசீலன் (வயது 23) என்பது தெரியவந்தது. மேலும் அந்த காரில் இருந்த 32 மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டது. இதுகுறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து சப்-இன்ஸ்பெக்டரை கார் ஏற்றிக் கொல்ல முயற்சி செய்ததாக இலங்கை வாலிபர் சூர்யாவை கைது செய்தனர். காரையும் பறிமுதல் செய்த போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story