விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தி யூனியன் கூட்டத்தில் தீர்மானம்
விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தி யூனியன் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொண்டி,
விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தி யூனியன் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
யூனியன் கூட்டம்
திருவாடானை யூனியன் சாதாரண கூட்டம் யூனியன் கூட்ட அரங்கில் யூனியன் தலைவர் முகமது முக்தார் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாண்டி, சேவுகப் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 36 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
அதனை தொடர்ந்து கவுன்சிலர்கள் சார்பில் கொண்டு வரப்பட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதம் நடைபெற்றது. அ.தி.மு.க. கவுன்சிலர் மதிவாணன் திருவாடானை யூனியனில் கடந்த 2020-21-ம் ஆண்டு நெற்பயிர் விவசாய பணிகள் முழுமையாக நிறைவடைந்து பயிர் அறுவடை செய்யும் நேரத்தில் கனமழை பெய்ததன் காரணமாக விவசாயிகள் கடுமையாக உழைத்து பாடுபட்டு விளைவித்த நெல்லை வீடு கொண்டு வந்து சேர்க்க முடியவில்லை.
நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி மீண்டும் முளைத்து விட்டது. பாதிக்கும் மேல் அழுகிவிட்டது.நோய் தாக்குதலுக்கு ஆளானது. இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்தித்தனர். இதனால் அ.தி.மு.க. அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கியது. ஆனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பயிர் காப்பீடு செய்தும் திருவாடானை யூனியன் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீடு தொகையை பயிர் இன்சூரன்ஸ் நிறுவனம் அறிவிக்கவில்லை.
வலியுறுத்தல்
எனவே ஒன்றிய குழுவின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட கலெக்டர் கவனத்திற்கும் தமிழக அரசின் கவனத்திற்கும் கொண்டு சென்று பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்த வேண்டும் என்றுபேசினார்.
அதனை தொடர்ந்து பேசிய காங்கிரஸ் கவுன்சிலர் கார்த்திகேயன் ராஜா, திருவாடானை சட்ட மன்ற உறுப்பினர் கருமாணிக்கம் சட்ட மன்றத்திலும், மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்தும் கடந்த ஆண்டுக்கான பயிர் இன்சூரன்ஸ் வழங்க கோரிக்கை விடுத்துள்ளார். எனவே ஒன்றிய குழுவின் சார்பிலும் கடந்த ஆண்டு பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
தீர்மானம்
அதனை தொடர்ந்து யூனியன் தலைவர் முகமது முக்தார் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்படும் என கூறியதை தொடர்ந்து கடந்த ஆண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள், யூனியன் அலுவலர்கள், குடிநீர், மின்வாரிய அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் சேவுகப் பெருமாள் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story