தூத்துக்குடி மாநகராட்சியில் தேர்தல் பணியாளர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை கையாளும் பயிற்சி ஆணையாளர் சாருஸ்ரீ தலைமையில் நடந்தது
தூத்துக்குடி மாநகராட்சியில் தேர்தல் பணியாளர்களுக்கு ஆணையாளர் சாருஸ்ரீ தலைமையில் நேற்று மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை கையாளும் பயிற்சி நடந்தது
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகராட்சியில் தேர்தல் பணியாளர்களுக்கு ஆணையாளர் சாருஸ்ரீ தலைமையில் நேற்று மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை கையாளும் பயிற்சி நடந்தது.
உள்ளாட்சி தேர்தல்
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிக்கப்பட்டு உள்ளன. இதைத் தொடர்ந்து விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி மாநகராட்சியில் தேர்தல் பணிகள் தொடங்கி உள்ளன. அதன்படி மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளும், தலா 10 வார்டுகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு 10 வார்டு தேர்தல் பணிகளையும் மேற்கொள்வதற்காக 6 உதவி தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதன்படி மாநகராட்சி செயற்பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா, மாநகர நல அலுவலர் வித்யா, செயற்பொறியாளர் (திட்டம்) ரங்கநாதன், உதவி ஆணையாளர் (பணியமைப்பு) சந்திரமோகன், உதவி செயற்பொறியாளர் (பணிகள்) சரவணன், உதவி செயற்பொறியாளர் (திட்டம்) ராமச்சந்திரன் ஆகிய 6 பேரும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
பயிற்சி
இதைத் தொடர்ந்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி தேர்தல் பணியாளர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கையாளும் பயிற்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ தலைமை தாங்கினார். பயிற்சியாளர் அரிகணேசன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கையாளுவது குறித்து பயிற்சி அளித்தார். பயிற்சியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் வாக்குச்சீட்டு பொருத்துவது, வாக்குப்பதிவை கண்காணிப்பது உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் விளக்கி கூறப்பட்டன. பயிற்சியில் மாநகராட்சி தேர்தல் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story